உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருப்பூரில் நிற்க வலியுறுத்தல்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருப்பூரில் நிற்க வலியுறுத்தல்

திருப்பூர்; நள்ளிரவில் ஈரோடு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருப்பூரில் நிற்காமல் கோவை சென்றடைகிறது. இரவு, 10:40 கன்னியாகுமரி எக்ஸ்பிரசுக்கு பின், மறுநாள் காலை, 6:45க்கு தான் திருப்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில் உள்ளது.எட்டு மணி நேரம் ரயில் இல்லாததால், சென்னை - திருவனந்தபுரம் ரயிலை திருப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தினமும் இரவு, 7:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12623), நள்ளிரவு, 12:50க்கு, ஈரோடு வந்தடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு, திருப்பூரில் நிற்காமல், கோவைக்கு அதிகாலை, 2:27க்கு செல்கிறது; காலை, 11:20க்கு திருவனந்தபுரம் சென்று சேர்கிறது.திருப்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல, காலை, 6:45க்கு, சபரி எக்ஸ்பிரஸ்; 9:35க்கு விவேக் எக்ஸ்பிரஸ், 11:40க்கு கேரளா எக்ஸ்பிரஸ்; இரவு, 9:55க்கு திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட், 10:40க்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என, ஐந்து தினசரி ரயில்கள் உள்ளன. ஸ்வெர்ண ஜெயந்தி (சனி), திருநெல்வேலி (புதன்), அரோனா (ஞாயிறு), ஹிம்சாகர் (வியாழன்) நான்கு வாராந்திர ரயில்கள் உள்ளன.இருப்பினும், இரவு, 10:40 க்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டால், அடுத்த ரயில், எட்டு மணி நேரம் கழித்து, காலை, 6:45 க்கு சபரி மட்டுமே. நள்ளிரவு, அதிகாலையில் திருப்பூர் வழியாக திருவனந்தபுரத்துக்கு ரயில் இல்லை.எட்டு மணி நேரம் ரயில் இல்லாததால், சென்னை - திருவனந்தபுரம் ரயிலை திருப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நள்ளிரவில் திருப்பூரை கடந்து செல்லும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்றால், பயணிகள் பயனடைவர்; அதிகாலையில் திருப்பூருக்கு வரும் ரயில்களில், கூட்டமும் குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை