உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பதிவு எண் இன்றி டிப்பர் லாரிகள் கனிம வள கடத்தலுக்கு அச்சாரம்?

பதிவு எண் இன்றி டிப்பர் லாரிகள் கனிம வள கடத்தலுக்கு அச்சாரம்?

பல்லடம்;பல்லடத்தில், பதிவு எண் இல்லாத டிப்பர் லாரிகளில், கனிம வளங்கள் செல்வதால், கனிம வளக் கடத்தல் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரப் பகுதியில், 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள், கிரஷர் நிறுவனங்கள் மூலம், ஜல்லிக்கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்டவையாக மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.அரசு தனியார் ஒப்பந்த பணிகள், ரோடு மற்றும் கட்டட கட்டுமான வேலைகள் உள்ளிட்டவற்றுக்கு, டிப்பர் லாரிகள் மூலம் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் டிப்பர் லாரிகள் சில, பதிவு எண் இல்லாமல் இயங்கி வருகின்றன. பல்லடம் பகுதியில் உள்ள கிரஷர் நிறுவனங்களை சார்ந்து, நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள், உரிய அனுமதி பெற்று, எடைகளை அளவீடு செய்து, எங்கிருந்து, எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்த விவரங்களுடனான ஆவணங்களுடன் தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், சில டிப்பர் லாரிகள் பதிவு எண்ணே இல்லாமல் இயங்குவதால், முறைகேடாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.சில தினங்கள் முன், வாகன விபத்து ஒன்றின் போது, ஒரே பதிவு எண்ணில் இரண்டு லாரிகள் இருந்ததை கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது பதிவு எண்ணே இல்லாமல் டிப்பர் லாரிகள் பகிரங்கமாக இயங்குவதால் முறைகேடுகள் நடக்கவும், கனிம வளங்கள் கடத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.தேர்தல் நேரம் என்பதால், அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கனிம வள கடத்தலுக்கு வாய்ப்பு உள்ளதால், இது தொடர்பாக, கூடுதலாக கண்காணிக்க வேண்டியதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N DHANDAPANI
ஏப் 12, 2024 16:34

கோவை வடக்கிலும் இதே போன்று டாரஸ் வண்டிகளில் முன் பின் இரண்டு பக்கமும் நெம்பர் பிளேட் இல்லாமல் இயங்குகிறது


ram
ஏப் 12, 2024 11:00

பல்லாவரம் திரிசூலம் மலையில் இருந்து உரிமம் பெற்றதுக்கு மேலாக பகல் இரவு என்று டோரஸ் வண்டிகளில் கனிம வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள், ஒரு நாளைக்கு நூறு முதல் ஐநூறு வண்டிகளில் போகிறது இதில் ஆளும் மற்றும் எதிர் கட்சி முக்கியமான ஆட்களுக்கு பங்கு உள்ளது அரசு அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ