உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச தரத்தில் மையம் தேவை

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச தரத்தில் மையம் தேவை

திருப்பூர்;தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில மாநாடு, திருப்பூர், முத்தணம்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநில நிறுவன தலைவர் கர்ணன் தலைமைவகித்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஆனந்தன் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டராஜன் வரவேற்றார்.திருப்பூரில் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும். கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன்பு, நான்கு வழிச்சாலையை கடந்துசெல்ல மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்; அங்கு, சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை நியமிக்கவேண்டும்.பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை.கால்வாய் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். டீக்கடைகளில் கலப்பட டீத்துாள் பயன்படுத்துவதைத் தடுக்க ேவண்டும்.ஆடை உற்பத்தியாளர்களும், வெளிநாட்டு வர்த்தகர்களும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு ஏதுவாக, திருப்பூரில் சர்வதேச தரத்தில் பொது மையம் ஏற்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் ராமர் நன்றிகூறினார்.---தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில மாநாட்டில், மாநில நிறுவன தலைவர் கர்ணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி