உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம்

சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் : திருப்பூரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக குமார் நகரில் உள்ள அங்கேரிபாளையம் ரோட்டில் பரிசோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.அங்கேரிபாளையம் ரோட்டிலிருந்து குமார் நகர், புஷ்பா சந்திப்பு வரும் வாகனங்கள் புதிய கமிஷனர் அலுவலகம் சந்திப்பு, குமார் நகர் சந்திப்பு, பங்களா ஸ்டாப் வழியாக புஷ்பா செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.குமார் நகரில் இருந்து அங்கேரிபாளையம் செல்லும் வாகனங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சந்திப்பு வழியாக, 60 அடி ரோடு, எல்.ஜி., சந்திப்பு, மருதாசலபுரம் ரோடு, டீச்சர்ஸ் காலனி முதல் வீதி அல்லது சிவன் தியேட்டர் ரோடு வழியாக அங்கேரிபாளையம் ரோட்டுக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை