உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி

தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி

உடுமலை : உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு, கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பார்வையிட வந்தனர்.அவர்களுக்கு, தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டால், காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.மேலும், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மீட்பு பணிகள் குறித்தும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ