உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணுக்கேற்ற மரங்கள் அழைக்கிறது வனம்

மண்ணுக்கேற்ற மரங்கள் அழைக்கிறது வனம்

பல்லடம்;பல்லடம் 'வனம்' அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜ் அறிக்கை: திருப்பூர், கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் சொந்த நிலத்தில் இலவசமாக மண் பரிசோதனை செய்து, குழிகள் ஏற்படுத்தி, உரமிட்டு, மண்ணுக்கேற்ற மரங்களை நடவு செய்ய 'வனம்' அமைப்பு உதவுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர், தங்கள் நிலத்தில் வேலி அமைத்திருக்க வேண்டும். சொட்டுநீர் பாசன வசதி, தண்ணீர் மற்றும் பராமரிப்பு வசதிகள் இருக்க வேண்டும். பொது இடங்களில் மரக்கன்று நடுவதாக இருந்தால், உரிய அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், பல்லடம்- திருச்சி ரோடு, பெரும்பாளி அருகிலுள்ள வனாலயம் அலுவலகம் அல்லது 90435 96977 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை