மேலும் செய்திகள்
மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் குப்பை
13-Aug-2024
உடுமலை;உடுமலை பைபாஸ் ரோட்டில், மழை நீர் வடிகாலில் கட்டுமான கழிவுகள் தேங்கியுள்ளதால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.உடுமலை பைபாஸ் ரோட்டில், பெரிய அளவிலான மழை நீர் வடிகால் அமைந்துள்ளது. பொள்ளாச்சி ரோடு மற்றும் பைபாஸ் ரோட்டை இணைக்கும் வகையில் இருந்த பாலம், துார்வாரும் பணியின் போது அகற்றப்பட்டது.தொடர்ந்து, பாலம் கட்டுமான பணி இழுபறியாகி வரும் நிலையில், கட்டட கழிவுகள், பெரிய அளவிலான கற்கள் அகற்றப்படாமல் உள்ளது.மழை நீர் வடிகாலும் துார்வாரப்படாமல், மண் மூடி, கழிவு நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. கழிவுகளை அகற்றி, மழை நீர் வடிகாலை துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Aug-2024