வி.ஏ.ஓ.,க்கள் இரவில் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர்; திருப்பூர், குமரன் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்றிரவு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தில் அங்கம் வகிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ''மற்றொரு சங்கத்தில் உறுப்பினராக உள்ள வி.ஏ.ஓ., ஒருவர், இணையவழிச் சான்றிதழ் வழங்குவதற்கான பாஸ்வேர்டை, எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இன்னொரு வி.ஏ.ஓ.,வுக்கு வழங்க மறுக்கிறார்.இதுகுறித்து ஆர்.டி.ஓ., விசாரிக்க வேண்டும்'' என்று வலியுறுத்திஉள்ளிருப்பு போராட்டத்தை நள்ளிரவு வரை தொடர்ந்தனர்.