உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்; கடந்த நான்கு ஆண்டுகளாக, காங்கயம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத, 63 வீடுகள் கண்டறியப்பட்டது. அந்த வீடுகளில் குடிநீர் இணைப்புகளை, நகராட்சி பணியாளர்கள் நேற்று துண்டித்தனர். விரைந்து கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தினர்.மொத்தம், 63 வீடுகளில், 2.72 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டண நிலுவை உள்ளது. கட்டணம் செலுத்தாமல், காலம் கடத்தியதால், இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !