உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் செய்முறை தேர்வு 20 வரை விண்ணப்பிக்கலாம்

அறிவியல் செய்முறை தேர்வு 20 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 2025 ஏப்., மாதம் நடக்கவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்களும், ஏற்கனவே தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தற்போது பயிற்சிக்கு பதிவு செய்யப்படுகிறது.அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி, 125 ரூபாய் கட்டணம் செலுத்தி, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள், மையம் போன்ற விவரங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில், 80 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும், என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை