மேலும் செய்திகள்
கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
27-Jun-2025
காங்கயம்; காங்கயத்தில் உள்ள தோட்டத்து பண்ணை வீட்டில், நுாறு நாட்டுகோழிகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் செந்தில்குமார், 51. இவரது மாமனார் தோட்டம் முள்ளிபுரம் சிவசக்திபுரத்தில் உள்ளது. அங்குள்ள பண்ணை வீட்டில் ஏராளமான நாட்டு கோழிகளை வளர்த்து வருகின்றனர். கடந்த, இரு நாட்களுக்கு முன், 80 நாட்டு கோழி திருடு போனது. அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி, 60 என்பவருடைய தோட்டத்தில், 15 நாட்டு கோழியும், யுவராஜ், 45 என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட, ஐந்து சேவல்கள் திருடு போனது. புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உலகுடையார்பாளையத்தில் ஆள் இல்லாத வீட்டில் திருட்டு முயற்சியும், ஒரு வீட்டில், 18 ஆயிரம் ரூபாய் திருடு நடந்தது. அப்போது, வீட்டில் நிறுத்தியிருந்த வாகனத்தில் பெட்ரோலை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
27-Jun-2025