உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

அவிநாசி : அவிநாசி அருகே குட்டகம் ஊராட்சியில் உள்ள கூளேகவுண்டம் புதுார் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று உழவாரப்பணி மற்றும் 108 சங்காபிஷேக வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தன.ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் சிவனடியார்கள் திரளாக பங்கேற்று கோவிலில் சுத்தம் செய்தனர்.மீனாட்சியம்மன் மற்றும் மொக்கணீஸ்வரர் ஆவாஹணம் செய்யப்பட்டு 108 சங்கு வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பதினாறு வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்று 108 சங்குகளில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது.திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. பக்தர்கள் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்காபிஷேக பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் தியாகராஜ சிவம் செய்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஸ்ரீ காசி யாத்திரை குழு நிறுவனர் ஆரூர சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை