உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனவு இல்லம் திட்டத்தில் 1296 புதிய பயனாளிகள்

கனவு இல்லம் திட்டத்தில் 1296 புதிய பயனாளிகள்

பல்லடம்; பல்லடம் பகுதியில் நடந்து வரும் கனவு இல்லம் திட்ட பணிகள் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குப்பின், கலெக்டர் கூறியதாவது:தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024--25ம் ஆண்டு, 1,411 பயனாளிகளுக்கு, 49.38 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இதுதவிர, ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில், 2,093 பயனாளிகளுக்கு, 15.30 கோடி ரூபாய் மதிப்பு என, மொத்தம், 3,504 பயனாளிகளுக்கு, 64.69 கோடி ரூபாய் மதிப்பில் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல், 2025--26ம் ஆண்டில், 1,296 பயனாளிகளுக்கு, 45.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, கள்ளகிணறு, காட்டூர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து, ஆய்வு மேற்கொண்ட கலெக்டர். தொடர்ந்து, பூமலுாரில் மரக்கன்று நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை