உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

13 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், தாசில்தார் நிலையிலான 13 அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காங்கயம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் தங்கவேலு, காங்கயம் தாசில்தாராகவும்; அங்கு பணிபுரிந்த மோகனன், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தாசில்தாராகவும்; அங்கு பணிபுரிந்த ராகவி, திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும்; அங்கு பணிபுரிந்த கோவிந்தசாமி, காங்கயம் ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கவுரிசங்கர், உடுமலை தாசில்தாராகவும்; அங்குபணிபுரிந்த விவேகானந்தன், தாராபுரம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும்; அங்கு பணிபுரிந்த ஷைலஜா, மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜேஷ்,பல்லடம் தாசில்தாராகவும்; அங்கு பணிபுரிந்த சபரிகிரி, கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார். இவர், மாற்றுப்பணியாக, கலெக்டரின் நேர்முக எழுத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். கோட்ட கலால் அலுவலர் ஜெய்சிங் சிவக்குமார், ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும்; அங்கு பணிபுரிந்த ஜெகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பல்லடம் சமூக பாதுகாப்பு திட்ட முன்னாள் தனிதாசில்தார் தமிழ்ச்செல்வன், காலியாக உள்ள நுகர்பொருள் வாணிப கழக உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ம் தேதியிட்ட கலெக்டரின் இந்த பணியிட மாறுதல் உத்தரவு விவரங்கள், தற்போதுதான் பொதுவெளிக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ