உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதார் பதிவு முகாம் 131 பேர் பங்கேற்பு

ஆதார் பதிவு முகாம் 131 பேர் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவன கட்டுப்பாட்டில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி தாலுகா அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன.வாரத்தில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கும் இம்மையங்களில், ஆதார் புதுப்பிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதனால், ஆதார் மையங்கள் எப்போதும் பிஸியாகவே காணப்படுகின்றன.வேலைக்கு செல்லும் தொழிலாளர் வசதிக்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுழற்சி முறையில் அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள மையங்களில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அந்தவகையில் நேற்று, திருப்பூர், குமரன் ரோட்டிலுள்ள வடக்கு தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள மையத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை, 9:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடத்தப்பட்டது.ஆதாரில் முகவரி, புகைப்படம் மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு பயாமெட்ரிக் பதிவுக்காக பலரும் ஆர்வமுடன் சிறப்பு முகாமில் பங்கேற்றனர். உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் பெறப்பட்டு, ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய முகாமில், 131 பேருக்கு ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கப்பட்டது.வரும் 29ம் தேதி, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை