உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோழி தீவனம் திருடிய 2 பேர் கைது

கோழி தீவனம் திருடிய 2 பேர் கைது

பல்லடம்: பல்லடம்-, உடுமலை ரோட்டில், தென்னை நாற்று உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு, ஆனைமலை - கம்மாளபட்டியை சேர்ந்த முருகேசன் மகன் பரமசிவம், 29 என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன், 35; ஆட்டோ ஓட்டுனர். இருவரும் இணைந்து, பண்ணை பயன்பாட்டுக்காக வந்த கோழி தீவனத்தில், ஒரு டன் தீவனத்தை, ஆட்டோவில் திருடி சென்றனர். பண்ணை மேலாளர் சந்திரசேகர், 48 அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !