திருப்பூர்;கடந்த, 37 ஆண்டுகளாக நிட்டிங் தொழிலில் இயங்கி வரும் போலார் டெக்ஸின், 'குவிக் சோலார்' என்ற 'சோலார் பார்க் டெவலெப்பர்' நிறுவனம், அரசு மானியத்துடன் சோலார் கட்டமைப்பதில் சாதனை படைத்து வருகிறது. மின்வெட்டு பிரச்னைகளை சமாளிக்கவும், மின் கட்டண சுமையை குறைக்கவும், சோலார் உற்பத்திக்கு மாற, ஒவ்வொரு தொழில்களும் முயற்சித்து வருகின்றன. அதற்காக, 'குவிக் சோலார்' நிறுவனம், 2012ம்ஆண்டு முதல், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சோலார் அமைத்து கொடுக்கிறது. பயன்பாட்டுக்கு ஏற்ப ஒரு மெகா வாட் முதல், 50 மெகா வாட் வரையிலான திறனுடன் சோலார் கட்டமைப்பு நிறுவுவதில் புகழ்பெற்ற நிறுவனமாக உருவெடுத்துளளது. வாடிக்கையாளர் வசதிக்காக, 'நிட்ேஷா' கண்காட்சியில் ஸ்டால் அமைத்துள்ளது. 'குவிக் சோலார்' இயக்குனர் வினோத் கூறுகையில், ''பிராண்டட் நிறுவனங்களில், சோலார் பேனல்கள் மற்றும் கருவிகளை கொண்டு, சோலார் பார்க் அமைத்து கொடுக்கிறோம். பல்வேறு திட்டங்களில், அங்கீகரிக்கப்பட்ட சோலார் டீலராக நியமிக்கப்பட்டிருக்கிறோம். குறைந்தது, 15 கிலோவாட் திறனில் இருந்து சோலார் பார்க் அமைத்து கொடுக்கிறோம். இதுவரை, ஆயிரத்தக்கும் அதிகமான சோலார் பார்க் அமைத்து கொடுத்துள்ளோம். கல்வி நிலையங்கள், அரசு கட்டடங்கள், பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகுளுக்கு சோலார் அமைத்து கொடுக்கிறோம். வீடுகளுக்கு, அரசு மானியத்துடன் 3 கிலோவாட் திறனுள்ள சோலார் அமைத்து கொடுக்கிறோம். விவரங்களுக்கு, 73737 27276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.