மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது
24-May-2025
திருப்பூர்: வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பூங்கா நகர் பகுதியில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். வீரபாண்டி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த முத்துபாண்டி, 28 என்பது தெரிந்தது. அவரிடம், 1.2 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.அருள்புரம் நால் ரோட்டில் திருப்பூர் மதுவிலக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர். ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் சந்தா, 24 என்பவரிடம் விசாரித்தனர். அவரிடம், 1.3 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இவர் ஆண்டிபாளையம், லட்சுமி நகர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவது தெரிந்தது. அவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
24-May-2025