உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு சீல்

வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு சீல்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில், கடை எண்:26க்கு, 10 மாதமாக 3.07 லட்சம் ரூபாய்; கடை எண்:27க்கு, 11 மாதமாக, 3.40 லட்சம், கடை எண்: 76க்கு, ஒரு ஆண்டாக, 3.61 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளது. இதையடுத்து மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனர் கணேஷ்குமார் தலைமையில், ஆர்.ஐ., துரைசாமி ஆகியோர், 3 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !