உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதரவற்ற நிலையில் 3 வயது சிறுவன் மீட்பு

ஆதரவற்ற நிலையில் 3 வயது சிறுவன் மீட்பு

திருப்பூர்; திருப்பூர், புதுபஸ்ஸ்டாண்ட் அருகே மூன்றுவயது சிறுவன் ஆதரவற்ற நிலையில் நின்றிருந்தார். இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது.உடனே உதவி மைய பணியாளர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டு, குழந்தைகள் நலக்குழு உத்தரவுப்படி, கடந்த 25 ம் தேதி, 15 வேலம்பாளையத்திலுள்ள டிஸ்ஸோ பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதால், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக, ஈரோடு மாவட்டம் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுவன், வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கலந்த சட்டை மற்றும் சிவப்பு நிற பேன்ட் அணிந்துள்ளார்.சிறுவன் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாட்களுக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழுவை 0421 2971198, 63826 14772 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம். ஈரோடு ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட்டை, 97906 13262 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை