உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 ஆண்டுகளில் உருவாகியுள்ள 33, 466 தொழில்முனைவோர்

3 ஆண்டுகளில் உருவாகியுள்ள 33, 466 தொழில்முனைவோர்

திருப்பூர்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில், தொழில் ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது.தாராபுரம், வெங்கிபாளையம் மற்றும் பல்லடம், சின்னியகவுண்டம்பாளையம் பகுதிகளில் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக, அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்சர் அன்பரசன் கூறுகையில்,''குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு வகைகளில் உதவி செய்வதன் வாயிலாக, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த, மூன்றாண்டில் 33 ஆயிரத்து 466 புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர்,'' என்றார்.முன்னதாக, பெரும்பாளி அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், குடியிருப்புகளின் விவரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் சரவணகுமார் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பல்லடம் அடுத்த, சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இரு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி