உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4 காலம் 2 லைன் ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் ஒலிக்க காந்தி அஸ்தி கலசத்துக்கு மரியாதை

4 காலம் 2 லைன் ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் ஒலிக்க காந்தி அஸ்தி கலசத்துக்கு மரியாதை

திருப்பூர்:திருப்பூரில், திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள காந்தி நகர் சர்வோதய சங்க வளாகம் மற்றும் பல்லடம் ரோட்டில் வித்யாலயம் வளாகத்திலும், காந்தி அஸ்தி கலசம் வைக்கப்பட்ட மேடை உள்ளது. காந்தி ஜெயந்தி நாளான நேற்று, அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள மேடையில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.. சர்வோதய சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் மலர் துாவி மரியாதை செலுத்தினர். ராட்டையில் நுால் நுாற்கப்பட்டு, 'ரகுபதி ராகவ ராஜாராம்...' பாடல் பாடினர் கதர் விற்பனை துவக்கம் குமார் நகர் கதர் அங்காடி வளாகத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றது. கலெக்டர் மனீஷ் நாரணவரே , கதர் பொருட்களை பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கிவைத்தார். கதர் விற்பனையை துவக்கிவைத்து கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் செயல்படும் இரண்டு கதர் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக, 300 பெண் நுாற்பாளர்கள்; நேரடியாக 50 நெசவாளர்கள்; மறைமுகமாக 200 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்கள் மாதம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை நெசவு கூலி பெறுகின்றனர். கடந்த 2024 - 25ம் ஆண்டில், 1.39 கோடி ரூபாய் மதிப்பில், கதர் மற்றும் பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் அவிநாசியில் செயல்படும் இரண்டு காதிகிராப்ட்களில், 2024- 25 ம் ஆண்டில், 3.60 கோடி ரூபாய்க்கு கதர் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கதர் பட்டு, பாலியெஸ்டர், சால்வை, சோப்பு, காலணி, ஊதுபத்தி, சந்தன மாலைகள் என, மொத்தம் 1.20 கோடி ரூபாய் மதிப்பில், விற்பனை நடைபெற்றுள்ளது. ரூ.3.6 கோடி இலக்கு நடப்பு 2025- 26ம் ஆண்டிலும், கதர் விற்பனை நிலையங்கள் வாயிலாக, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் கதர் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத சிறப்பு தள்ளுபடியில், தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தமிழ்நாடு கதர் தொழில்கள் துணை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். காந்தி உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். -- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர், பல்லடம் ரோடு வித்யாலயம் வளாகத்தில் உள்ள காந்தி அஸ்தி கலச மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது; அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. 'கதராடை வாங்குங்கள்' ''பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பினர் உள்பட அனைவரும், காந்தியின் கனவை நனவாக்கும்வகையில், கதர் ரகங்களை வாங்கி ஆதரவு அளிக்கவேண்டும். இந்திய குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி, ஏழை, எளிய நுாற்பாலைகள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார் கலெக்டர் மனீஷ் நாரணவரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை