உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு

ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த, 2010ம் ஆண்டு முதல், 154 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தனி கோர்ட் உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ கஞ்சா, கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் அழிக்கப்பட்டது. திருப்பூர் கஞ்சா ஒழிப்பு குழு தலைவர், மாநகர கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா, லோகநாதன், போலீஸ் உதவி கமிஷனர் செங்குட்டுவன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !