ஒரே நாளில் 5 இடங்களில் தீ விபத்து; தீயணைப்பு துறையின் அசராத பணி
உடுமலை; உடுமலையில் ஒரே நாளில், 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டது.உடுமலை பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடுமலை தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பயணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 8:30 மணிக்கு, மைவாடியிலுள்ள தனியார் நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தொடர்ந்து, பெரியகோட்டை பிரிவு, துணை மின் நிலையம் முன்புறம் மற்றும் ரோட்டில் இருந்த புல் வெளி தீ பிடித்து எரிந்தது அணைக்கப்பட்டது.தொடர்ந்து, யு.கே.சி., நகரில் பந்தல் அமைக்கும் நிறுவனத்தில், மரம் மற்றும் தென்னங்கீற்றுக்கள் தீப்பிடித்து எரிந்தது.கோமங்கலம் அருகே, பனிக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வெள்ளியம்பாளையம் கிராமத்தில், முட்காட்டில் தீ விபத்து என, மாலை, 4:45 மணி வரை, தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில், 5 இடங்களில் தீ பிடித்து, அணைக்கும் பணி நடந்துள்ளது.