உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்டத்தில் 500 பா.ஜ.,வினர் கைது

டாஸ்மாக் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்டத்தில் 500 பா.ஜ.,வினர் கைது

திருப்பூர் : 'டாஸ்மாக்' ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினர், 500 பேரை போலீசார் கைது செய்தனர்.'டாஸ்மாக்' ஊழலை கண்டித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென் னையில் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். முன்னதாகவே தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைதுசெய்தனர்.இதனை கண்டித்து, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி சந்திப்பு, அவிநாசி, பல்லடம், தாராபுரம் என, பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சென்றனர். அந்தந்த இடத்துக்கு சென்ற பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்ய ஆரம்பித்தனர்.

'டாஸ்மாக்' குடோன்முற்றுகையிட முயற்சி

மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், திடீரென அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்.அப்போது, 'சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், உருவபொம்மையை எரிக்கும் வரை காத்திருந்த போலீசார், தற்போது காரில் இருந்து இறங்கும் நிர்வாகிகளை கைது செய்வதை கண்டித்தனர். இதன் காரணமாக போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும், 500 பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.

'வாக்கி டாக்கி'மறந்த போலீஸ்

அண்ணாமலை கைதை கண்டித்து பா.ஜ., வினர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், காங்கயத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., வினர் ஈடுபட்டனர். அப்போது, காங்கயம் போலீஸ் ஒருவர், 'வாக்கி டாக்கி'யை, அங்குள்ள இளநீர் கடையில் மறந்து வைத்து சென்றனர்.பின், போலீசார் யாரும் வராததால், இளநீர் கடை நடத்தி வரும் பெண், உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார்.

அவிநாசியில்...

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நகர தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.நீலகிரி லோக்சபா தொகுதி இணை பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணை தலைவர் சண்முகம்,மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்த போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, இரவு, 7:00 மணிக்கு விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை