உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 7 கிலோ கஞ்சா பறிமுதல்; வட மாநிலத்தவர் கைது

7 கிலோ கஞ்சா பறிமுதல்; வட மாநிலத்தவர் கைது

பல்லடம்; கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் இருவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாலா பெகரா 35; பல்லடம் அடுத்த, சித்தம்பலம் சேரன் மாநகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்க்கிறார். இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், பாலா பெகராவை கைது செய்தனர். அவரது அறையில் மறைத்து வைத்திருந்த, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதே போன்று, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் 25; திருப்பூரை அடுத்த, பெருமாநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம்-, கரைப்புதுார் செல்லும் ரோட்டில் உள்ள குடோன் ஒன்றில் மறைத்து வைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். தகவல் அடிப்படையில், அவரை கைது செய்த பல்லடம் போலீசார், அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ