சூதாட்டம்: 8 பேர் கைது
அவிநாசி; அவிநாசி அருகே கருவலுார் - செங்காளிபாளையம், குட்டைக்காட்டு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் தீவிரமாக போலீசார் கண்காணித்தனர்.அதில், பணம் வைத்து சூதாடிய முனியன், செல்வகுமார், வெள்ளிங்கிரி, தங்கவேல், கணேஷமூர்த்தி, கருப்பசாமி, விஸ்வநாதன், ஆகிய எட்டு பேரை கைது செய்த போலீசார், சீட்டு கட்டு மற்றும் ரொக்கம் 48 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.