புதர்களை அகற்றணும்
உடுமலை - பழநி ரோட்டில் அரசு அலுவலக வளாகத்தில் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால், விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் உலா வருகின்றன. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். புதர்செடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வராஜ், உடுமலை சேதமடைந்த நிழற்கூரை
உடுமலை அருகே மானுப்பட்டியில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நிகழற்கூரையை சீரமைக்க குறிச்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துக்குமார், உடுமலை. கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்டு முதல் பழைய பஸ் ஸ்டாப் வரை கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- திருமூர்த்தி, உடுமலை. மதுக்கடையை மாற்றணும்
உடுமலை, பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மது அருந்திவிட்டு, பலரும் ரோட்டை மறித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கும் அச்சப்படுகின்றனர். எனவே மதுக்கடையை இடம் மாற்ற செய்ய வேண்டும்.- ரேவதி, உடுமலை. கழிவுகளால் துர்நாற்றம்
உடுமலை, அருகே சின்னவீரம்பட்டி ஊராட்சி எல்லையில், நகரப்பகுதிகளிலிருந்து இறைச்சி மற்றும் காய்கறிக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும்.- நாகராஜன், ஏரிப்பாளையம். ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் முன் ரோடு, சேதமடைந்து பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை. சென்டர் மீடியனில் செடிகள்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிபட்டி முதல் சி.டி.சி., மேடு வரை உள்ள சென்டர் மீடியன் திட்டுகளில் செடிகள் முளைத்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ரஞ்சித், பொள்ளாச்சி. தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை,மலையாண்டிகவுண்டனுார் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், இருள் சூழ்ந்திருப்பதால், பொதுமக்களுக்கு திருட்டு பயமும் ஏற்படுகிறது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், மலையாண்டிகவுண்டனுார். போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முதல் மகாலிங்கபுரம் வரை, வாகனங்கள் அதிகளவு ரோட்டில் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -கோபால், பொள்ளாச்சி. புதர் அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு, பழனிக்கவுண்டன்புதுார் - செங்குட்டைபாளையம் செல்லும் ரோட்டின் இருபுறமும் செடிகள் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இந்த வழியில் பாம்பு அதிகமுள்ளதால், நடந்து செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.- -சங்கர், கோவில்பாளையம். ரோட்டில் கழிவு நீர்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 7வது வார்டு, ஏர்பதி நகரில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு டெங்கு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -மஜீத், சூளேஸ்வரன்பட்டி. இரும்பு பெயர்ந்தது
பொள்ளாச்சி, வடுகபாளையம் பிரிவு மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன. வாகனங்கள் செல்லும் போது, பயங்கர சப்தத்துடன் அதிர்கின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.- -சுபா, பொள்ளாச்சி. கரடு முரடான ரோடு
வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் ரோடு, கரடு முரடாக உள்ளது. இதனால், இந்த ரோட்டில் பயணம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- -சரிதா, வால்பாறை.