உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தின் முடிவில் பள்ளம்; தடுப்புச்சுவர் அவசியம்

பாலத்தின் முடிவில் பள்ளம்; தடுப்புச்சுவர் அவசியம்

உடுமலை; பெதப்பம்பட்டியிலுள்ள உயர் மட்ட பாலத்துக்கு தடுப்புச்சுவர் கட்டி, மின்விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில், பெதப்பம்பட்டி அருகே, உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையில் முன்பு இருந்த தரைமட்ட பாலம், கடந்த, 2016ல், உயர் மட்ட பாலமாக மேம்படுத்தப்பட்டது. மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12.9 மீ., அகலத்தில், 28.3 மீ., நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது. இரு பக்கங்களிலும், 0.7 மீட்டரில் பாதசாரிகளுக்காக, நடைபாதையும் அமைக்கப்பட்டது. ஆனால், இரு புறங்களிலும், நடைபாதை முடியும் இடத்தில், தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. பாலத்தை ஒட்டி பள்ளம் உள்ளதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும், அவ்விடத்தில், தெருவிளக்குகள் இல்லாததால், பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில், அனைத்து வாகன ஓட்டுநர்களும் திணறுகின்றனர். எனவே பாலத்தில் போதுமான அளவு தடுப்பு சுவர் கட்டி, மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ