உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவு ஏற்றி வந்த கேரள லாரி பல்லடம் அருகே சிறைபிடிப்பு

கழிவு ஏற்றி வந்த கேரள லாரி பல்லடம் அருகே சிறைபிடிப்பு

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆலுாத்துப்பாளையத்தில், லாரி ஒன்று நேற்று அதிகாலை கழிவுகளை கொட்டி விட்டு புறப்பட்டது. பொதுமக்கள் லாரியை விரட்டி சிறை பிடித்தனர்.பொதுமக்கள் எதிர்ப்பால், மீண்டும் அதே லாரியில் கழிவுகள் திருப்பி ஏற்றப்பட்டன. உரிய நடவடிக்கை எடுக்காமல் லாரியை எடுத்துச் செல்லக்கூடாது என, மக்கள் திட்டவட்டமாக கூறினர். சட்ட விரோதமாக, கேரளாவில் இருந்து பல்லடத்துக்கு கழிவுகளை அனுப்பியவர், வாங்கியவர், வாகன உரிமையாளர் ஆகிய அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், எந்த வழியாக, இதுபோன்ற வாகனங்கள் தமிழகத்திற்கு வருகின்றன என்பது குறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள், சேர், சோபா உள்ளிட்ட கழிவுகளை, கேரளாவில் இருந்து வந்து இங்கு கொட்டியுள்ளனர். தமிழகம் குப்பை தொட்டியா...'கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வரை பல சோதனைச்சாவடிகளை கடந்து, லாரி எப்படி இங்கு வந்தது; லாரியை சிறை பிடித்து வழக்கு பதிவு செய்வதுடன், லாரி உரிமையாளருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்' என ஆவேசப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kongunadu Arunkumar Ganesh
நவ 19, 2024 21:00

இந்த விசயத்தில் முதலில் திருந்த வேண்டியது தமிழ்நாடு பார்டர் செக் போஸ்ட் போலீஸ் தான்...


Easwar Moorthy
நவ 15, 2024 07:58

போலி நம்பர் பிலேட்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை