மேலும் செய்திகள்
மோகனுார் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
04-Aug-2025
திருப்பூர்; விஷ்ணுபதி புண்ணியகாலமான நேற்று, வீரராகவப்பெருமாள் கோவிலில், பக்தர்கள், 27 முறை வலம் வந்து கொடிமரத்தை வணங்கினர். விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது, மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வைகாசி, ஆவணி, கார்த்தி மற்றும் மாசி மாதம் பிறக்கும் நாட்களில், ஆண்டுக்கு நான்குமுறை விஷ்ணுபதி புண்ணியகாலம் வருகிறது. இந்நாட்களில், பெருமாள் கோவில்களில் வழிபடுவதன் மூலம் துன்பம் மறைந்து, சுபிட்சம் ஏற்படும் என்பது நம்பிக்கை. ஆவணி மாத பிறப்பான நேற்று விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு களைகட்டியிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாள் கோவிலில் கொடிமரம் மற்றும் பிரகார வலம் வந்து வழிபட்டனர். வெள்ளை நிறத்தில், 27 பூக்களுடன் கோவிலை வலம்வரத் துவங்கினர்; கொடிமரத்தை வலம் வந்து, அப்படியே, கோவிலையும் சுற்றி 27 முறை வழிபட்டனர். அதிகாலை துவங்கி, காலை, 11:00 மணி வரை, புண்ணியகாலம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
04-Aug-2025