மேலும் செய்திகள்
'குரூப் 4' மாதிரித்தேர்வு இளைஞர்கள் ஆர்வம்
02-Jun-2025
திருப்பூர் : வி.ஏ.ஓ., - இளநிலை உதவியாளர், பில்கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு, தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 12ல் நடக்கிறது. மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வெற்றிகரமாக தேர்வை எதிர்கொள்ள, தேர்வர்களை தயார்படுத்திவருகிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அந்த வகையில், அடுத்தடுத்து ஆறு மாதிரி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதல் மாதிரி தேர்வு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார், மாதிரித்தேர்வை துவக்கி வைத்தார். தேர்வுக்கு தயாராகிவரும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தேர்வு எழுதினர்.வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் குமார் கூறியதாவது:இன்று நடந்த மாதிரித்தேர்வை, 250 பேர் எழுதியுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி வகுப்பில் படிப்போர் தவிர, கூடுதலாக 50 பேர் தேர்வு எழுதியுள்ளனர். வரும் 21ம் தேதி, 26, ஜூலை 2, 4, 9 தேதிகளில் அடுத்தடுத்து மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளன. குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் பங்கேற்று, மாதிரித்தேர்வு எழுதலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.---கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று நடந்த 'குரூப்-4' மாதிரித்தேர்வை பலர் எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டம் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு, மாதிரித்தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், தேர்வர்கள், குரூப் 4 தேர்வை திறம்பட எதிர்கொள்ளமுடியும்; குறிப்பாக, முதல்முறை குரூப் தேர்வை எதிர்கொள்வோர், மாதிரித்தேர்வில் பங்கேற்பதன் மூலம், தேர்வில் கேள்விகள் அமையும் விதம், நேரமேலாண்மை குறித்த புரிதல்களை பெறலாம். மாதிரித்தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்படும். இதன் வாயிலாக, தேர்வர்கள் தங்கள் திறனை சுய பரிசோதனை செய்து, மேம்படுத்திக் கொள்ள முடியும்.- சுரேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.
02-Jun-2025