உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதார் முகாம் நாளை நடக்கிறது

ஆதார் முகாம் நாளை நடக்கிறது

திருப்பூர்; திருப்பூர் வடக்கு தாலுகாவில் நாளை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அளவிலான ஆதார் மையங்கள், வாரம் ஒரு தாலுகா என்ற வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், நடப்பு வார முகாம் நாளை, (21ம் தேதி), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக ஆதார் சேவை மையத்தில் நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ