உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெதப்பம்பட்டியில் ஆதார் பதிவு மையம்

பெதப்பம்பட்டியில் ஆதார் பதிவு மையம்

உடுமலை: குடிமங்கலம் வட்டார மக்களுக்காக, பெதப்பம்பட்டியில், ஆதார் பதிவு மையம் துவக்கப்பட்டுள்ளது. உடுமலை தாலுகா, குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்ட வருவாய் கிராம மக்கள், ஆதார் சார்ந்த பல்வேறு சேவைகளுக்காக உடுமலைக்கு வரும் நிலை உள்ளது. நகரிலும் போதிய மையங்கள் இல்லாததால், மக்கள் பாதித்து வந்தனர். முதியோர் மற்றும் குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, குடிமங்கலம் வட்டாரத்தில் ஆதார் சேவை மையம் துவக்க நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வந்தனர். நீண்ட இழுபறிக்குப்பிறகு எல்காட் சார்பில், ஆதார் பதிவு மையம், பெதப்பம்பட்டியில் துவக்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் சார்ந்த அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பதால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி