உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க ஊராட்சிகளில் நடவடிக்கை தேவை

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க ஊராட்சிகளில் நடவடிக்கை தேவை

உடுமலை; கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, மீண்டும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தரமில்லாத பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாநில அளவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளிலும், இந்த தடையை நடைமுறைப்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஊரக வளர்ச்சித்துறை உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, ஆய்வுகள் நடத்தியும், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் தற்போது கடைகளில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மட்டுமின்றி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பொறுப்பாக உள்ளது.ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பைகள் வணிக கடைகளில், பயன்பாட்டில் உள்ளது. வணிக கடைகள் மட்டுமின்றி, டாஸ்மாஸ்க், இறைச்சி, சிறுவணிக கடைகளிலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துகின்றனர். அதன் கழிவுகள் முழுவதும் நீர்நிலைகளிலும், வேளாண் விளை நிலங்களுக்கு அருகிலும் குவிகிறது. இவற்றை கால்நடைகள் உண்பதால் அவைகளுக்கு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. மேலும், நிலத்தின் தன்மையும் மோசமாகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம், மீண்டும் அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்துவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் அறிவிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை