உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனரகம் சார்பில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சியிலும் அரசின் வளர்ச்சிப்பணிகள் எந்தளவு நடந்து முடிந்துள்ளது, சொத்து வரி உள்ளிட்ட வரி வசூல் எந்தளவு நடந்து முடிந்துள்ளது என்ற ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, உதவி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு பேரூராட்சியிலும் சொத்து வரி வசூலில் கவனம் செலுத்த வேண்டும், அதோடு, கட்டட அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் ஏற்கனவே வரி செலுத்தி வரும் கட்டட உரிமையாளர்கள், கூடுதல் பரப்பில் கட்டடங்களை கட்டி அதற்கு வரி விதிப்பு பெறாத பட்சத்தில், அந்த கட்டடங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கெங்கு,எவ்வளவு?

நவ., மாத நிலவரப்படி, குன்னத்துார் பேரூராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்களுக்கு, வரியாக வசூலிக்கப்பட வேண்டிய, 7.86 லட்சம் ரூபாயில், 6 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.முத்துார் பேரூராட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய, 8.49 லட்சம் ரூபாயில், 5.60 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ருத்ராவதி பேரூராட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய, 2.40 லட்சம் ரூபாயில், 1.30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.கணியூர் பேரூராட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய, 1.51 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பேரூராட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய, 11 லட்சம் ரூபாயில், 4 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொமரலிங்கம் பேரூராட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய, 3.55 லட்சம் ரூபாயில், 2.67 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.'எஞ்சிய வரி வசூல் பாக்கியை விரைவில் வசூலிக்க வேண்டும்'என, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை