மேலும் செய்திகள்
3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
26-Apr-2025
திருப்பூர், ; ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இயக்கப்படும் தன்பாத், பரூனி வாராந்திர சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தவர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை - தன்பாத் சிறப்பு ரயில் (எண்:06063), இதுவரை, 12 பெட்டிகளுடன் இயங்கியது; இனி, 23 பெட்டிகளுடன் இயங்கும். படுக்கை வசதி பெட்டி, 12 ஆக இருந்தது; 16 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவரை ஏ.சி., பெட்டி இல்லை; இனி, நான்கு பெட்டி இணைக்கப்படுகிறது. போத்தனுார் - பரூனி சிறப்பு ரயில் (எண்:06055), 20 பெட்டிகளுடன் இயங்கியது; கூடுதலாக, இரண்டு படுக்கை வசதி, ஒரு ஏ.சி., பெட்டி இணைத்து, இனி, 23 பெட்டிகளுடன் இயங்கும்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு இயங்கும் ரயில்களில் கூட்டம் அதிகரித்ததால், கோவையில் பயணம் துவங்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் தன்பாத், பரூனிக்கு ஓராண்டாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் முன்பதிவு அதிகரித்ததால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.கோவையில் புறப்பட்டு சொந்த மாநிலம் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பால், வடமாநிலத்தவர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26-Apr-2025