மேலும் செய்திகள்
ஆதார் மையத்துக்கு பூட்டு; பொதுமக்கள் ஏமாற்றம்
11-May-2025
உடுமலை; பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலக வளாகதிலுள்ள ஆதார் மையத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் வருகை அதிகரித்துள்ளது.பள்ளி, கல்லுாரி சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல், ரேஷன் கார்டுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள, ஆதார் மையத்திற்கு, ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் திரண்டு வருகின்றனர். அதே போல், உடுமலை நகராட்சி அலுவலகத்திலுள்ள, ஆதார் மையம் முறையாக திறக்கப்படுவதில்லை.இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையத்தை, முறையாக திறக்கவும், வரும் அனைத்து பொதுமக்களுக்கும் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.அதே போல், தாலுகா அலுவலகங்களிலுள்ள இ-சேவை மையத்திற்கும், வருமானச்சான்று, ஜாதிச்சான்று என உயர்கல்விக்கு சேருவதற்கான சான்றுகள் பெற, மாணவர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.எனவே, ஆதார் மற்றும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், உடனடியாக பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதில் உரிய கவனம் செலுத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
11-May-2025