உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கமிஷனர் அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

கமிஷனர் அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

திருப்பூர் : சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று திருப்பூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று காலை திருப்பூர் வந்தார். அவிநாசி ரோட்டில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரை போலீசார் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்றனர். அதன்பின் பிற்பகல் வரை கமிஷனர் அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.மாநகர போலீஸ் எல்லையில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்த விவரங்கள், அவற்றின் மீது பதியப்படும் வழக்குகள், விசாரணை நிலவரம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், கோர்ட் விசாரணையில் உள்ள வழக்குகள், தண்டனை பெறப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் எண்ணிக்கை விவரம் உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆய்வின் போது விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை