வாக்காளர் சிறப்பு முகாம் பணி அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
திருப்பூர்: மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம் முன்னிலை வகித்தனர்.வரும், 17ம் தேதி, காங்கயம் வரும் கட்சியின் பொது செயலாளர் பழனிசாமிக்கு, நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க வேண்டும். வாக்காளர் சிறப்பு முகாம்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், நிலை முகவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, வாக்காளருக்கு உதவ வேண்டும். பூத் வாரியாக பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், பெருமாநல்லுாரில் நடத்தி, நல உதவிகள் வழங்கும் ஏற்பாடுகளை துவக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.