உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளை நிலத்தில் வன விலங்குகள் நுழைவதை தடுக்க ஆலோசனை

விளை நிலத்தில் வன விலங்குகள் நுழைவதை தடுக்க ஆலோசனை

திருப்பூர்; வேலிகள் அமைத்து, விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க, ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தாராபுரம் தாலுகாவில், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், தளவாய்பட்டினம் கிராம காப்புக்காடுகளில் வன விலங்குகள் உள்ளன. இவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.விவசாய நிலங்களில் வன விலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா முன்னிலை வகித்தனர்.வன விலங்குகளை கட்டுப்படுத்த, விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள காப்புக்காடுகளில், 8 கி.மீ., சுற்றளவுக்கு வேலி அமைக்க வேண்டும். விலங்குகளை வனப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். விளை நிலங்கள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் வன பணியாளர்களை நியமித்து, வன விலங்குகளிடமிருந்து விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என, அமைச்சர் கயல்விழி அறிவுறுத்தினார்.தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, காங்கயம் வனசரகர் சுரேஷ்கிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை