உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் வேளாண் இயந்திரம்

மானிய விலையில் வேளாண் இயந்திரம்

திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: வேளாண் பொறியியல் துறை மூலம், குறு, சிறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு, பவர் டில்லர் பெறுவதற்கு அதிகபட்சம் 1.20 லட்சம் ரூபாய்; களையெடுப்பான்களுக்கு அதிகபட்சம் 63 ஆயிரம் ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.மற்ற விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின குறு, சிறு விவசாயிகளுக்கு, நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீதமும்; பொது பிரிவு விவசாயிகளுக்கு 10 சதவீதமும் கூடுதல் மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது.விவசாயிகள் தங்கள் பங்களிப்பு தொகையை, ஆர்.டி.ஜி.எஸ்., - நெப்ட் அல்லது வங்கி வரைவோலை மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தொகை செலுத்தி, வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம், வருவாய் கோட்ட அளவிலான உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வட்டார அளவிலான உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ