மேலும் செய்திகள்
பழனிசாமி பிறந்த நாள்: அன்னதானம் வழங்கல்
13-May-2025
திருப்பூர், ; திருப்பூரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் சரி பார்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.அ.தி.மு.க.,வில் அனைத்து தொகுதிகளிலும் பூத் வாரியாக புதிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ள பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பூத்வாரியாக தலா ஒன்பது பேர் இதில் உறுப்பினர்களாக தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் சரி பார்ப்பு கூட்டம் தற்போது பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று திருப்பூர் மாநகர் மாவட்ட அமைப்பின், கருவம்பாளையம் மற்றும் நல்லுார் ஆகிய பகுதிகளில் அடங்கிய பூத்கமிட்டி நிர்வாகிகள் சரிபார்ப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். சரிபார்ப்பு குழு பொறுப்பாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., குணேசகரன் பகுதி செயலாளர்கள், வார்டு செயலார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-May-2025