உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை ஆக்கிரமித்து அலுவலகம் அகற்ற மறுக்கும் அ.தி.மு.க.வினர்

ரோட்டை ஆக்கிரமித்து அலுவலகம் அகற்ற மறுக்கும் அ.தி.மு.க.வினர்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 13வது வார்டு சாமிநாதபுரம் பிரதான சாலை ஆக்கிரமிப்பால் குறுகி காணப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதனையொட்டி, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு அமைத்து வருகின்றனர். இதில், அப்பகுதி அ.தி.மு.க.வினர் ரோட்டை ஆக்கிரமித்து கட்சி அலுவலகத்தை அமைத்து உள்ளனர். அதனை அகற்ற மாநகராட்சி சார்பில், அ.தி.மு.க. வினருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு அலுவலகத்தை அகற்ற மறுத்து வருகின்றனர். அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிய அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்தை அகற்றுவதில் காலம் கடத்தி வருகின்றனர். இதனால், அந்த இடத்தில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அதேநேரம் மக்கள் நலன் கருதி அ.தி.மு.க. அலுவலகத்தை அகற்றி முன் மாதிரியாக திகழ வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை