உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலில் அம்மன் சன்னதி... சக்திகளின் சொரூபம் : நீராழிப்பத்தி பழமை மாறாமல் அமைப்பு

அவிநாசி கோவிலில் அம்மன் சன்னதி... சக்திகளின் சொரூபம் : நீராழிப்பத்தி பழமை மாறாமல் அமைப்பு

- நமது நிருபர் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என, முப்பெரும் சக்திகளின் சொரூபமான கருணாம்பிகை அம்மன், அருள்பொங்கும் கருணை விழிகளுடன், நீராழி பத்தி புடைசூழ நின்றபடி, இனி கருணை மழை பொழியப்போகிறாள்!'காசியில் வாசி அவிநாசி' என்று போற்றப்படும் அவிநாசி திருத்தலம், தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை என, பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள எம்பெருமானை வணங்கினால், மீண்டும் பிறவாநிலை ஏற்பட்டு, அழியாபுகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அவிநாசியப்பருக்கு வலது புறமாக இருந்து அருள்பாலிக்கும் கருணாம்பிகையின் கருணை அளவிட முடியாதது. கடவுளின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வகையில், பெருங்கருணை அம்மை என்றும், கருணாம்பிகை என்றும் அழைக்கப்படும், பெருங்கருணை நாயகி, பக்தியுடன் வழிபடுவோருக்கு அருளை வாரி வழங்குகிறாள்.பிரளய தாண்டவம் ஆடிய சிவபெருமான், காசியில் சிவலிங்க சொரூபமாக மறைந்து அருளினார். தங்களை நோக்கி தவம் இயற்ற சரியான தலத்தை காட்டியருள வேண்டும்' என்ற, பார்வதி தேவியின் கோரிக்கையை ஏற்று, திருப்புக்கொளியூரில் பார்வதி தவம் இயற்றினாள்.

3 சக்திகளின் பேரருள்...

சோலைகளுக்கு நடுவே இருந்த மாமரத்தடியில் அன்னை தவம் இருந்தாள்; காசியில் இருந்த லிங்கத்தின் வேர் அவிநாசிக்கு வந்து, சுயம்பு லிங்கமாக உருவெடுத்தது; அன்னையும் வணங்கி, தவத்தை பூர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது. தவம் இயற்றிய அன்னைக்கு, சர்வவேஸ்வரன் வலப்பாகத்தை அருளி, ஆட்கொண்டதாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்திகள் புடைசூழ முழு சக்தி ரூபமாகவும், கருணையின் இருப்பிடமாகவும் காட்சியளிக்கிறார் கருணாம்பிகை அம்மன். அம்மன் சன்னதி கருவறை சுவற்றில் இருந்த கல்வெட்டுகள், படியெடுத்து, வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. கருவறையை சுற்றியிருந்த பகுதி மண்ணில் புதைந்திருந்ததால், தற்போது அங்கிருந்த மண் அகற்றப்பட்டு, நீராழி பத்தி அமைக்கப்படுகிறது.அதாவது, அம்மன் சன்னதி கருவறையை சுற்றை, பக்தர்கள் தொட்டு வணங்க முடியாது. கருவறை சுவற்றை சுற்றிலும் சிறிய பள்ளம் போன்ற நீராழி பத்தி அமைத்து, தடுப்பு வேலியும் அமைக்கப்பட உள்ளது.மண்ணில் மறைந்திருந்த கல்வெட்டு வரிகள், தற்போது காட்சிக்கு தெரிய வந்துள்ளன; அவற்றைபடியெடுத்தால், எம்பெருமான் சர்வேஸ்வரன் மற்றும் வலப்பாகம் பெற்று அருள்பாலிக்கும், கருணாம்பிகை அம்மனின் அருமை, பெருமைகளை பக்தர்கள் அறிவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை