உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்முன் அழிந்து வரும் முன்னோர் வாழ்விடங்கள்

கண்முன் அழிந்து வரும் முன்னோர் வாழ்விடங்கள்

பல்லடம்; நகரங்கள் விரிவடைவதன் காரணமாக, பல்லடம் வட்டாரத்தில், முன்னோர் நினைவாக வைக்கப்பட்ட கல் திட்டை மற்றும் கல் வட்டங்கள் ஆகியவை நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன.இது குறித்து, பல்லடம் வட்டார வரலாற்று ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:பல்லடம் பகுதியில் வரலாற்று சிறப்புகள், முன்னோர் விட்டுச் சென்ற நினைவுகள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வகையில், ஏறத்தாழ, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இறந்தவர்கள் நினைவாக கல் திட்டைகள், கல்வட்டங்கள் ஆகியவை வைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கல் திட்டைகள் என்பது மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துரைப்பது. மக்கள் வாழ்ந்து மறைந்ததன் நினைவாக வைப்பது கல் திட்டைகள். இதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படுவது கல் வட்டங்களாகும்.இவற்றின் கீழ் இறந்தவர்களின் சமாதிகள் இருக்கும். கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு மற்றும் உகாயனுார் செல்லும் ரோட்டில், ஏராளமான கல் திட்டைகள் மற்றும் கல் வட்டங்களை காணலாம். பல்லடம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களிலும் இதுபோன்று, முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்து கூறும் கல் திட்டைகள், கல் வட்டங்கள் அதிக அளவில் இருந்தன.பூமிக்கு கீழ், 5 அடி முதல் 7 அடி வரை இதுபோன்ற முன்னோர்களின் சடலங்கள் புதைக்கப்படுவது வழக்கம். பெருங்கற்கால சின்னங்கள் என்று இவை கூற கூறப்படுகின்றன. நகர விரிவாக்கம், குடியிருப்புகளின் பெருக்கம் ஆகியவற்றால், முன்னோர்களின் வாழ்விடங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. மேலும், இவை குறித்து ஆராய்ந்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி