உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

உடுமலை: உடுமலையில், கால்நடைத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடுமலை கால்நடைத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் ஊராட்சி வெனசுப்பட்டி கிராமத்தில் நடந்தது. உடுமலை கோட்ட உதவி இயக்குநர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கால்நடை உதவி டாக்டர்கள் முருகன், பிரகாஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், 750க்கும் மேற்பட்ட கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கோழிகளுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். மேலும், முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகள் வளர்ப்போர் மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்