மேலும் செய்திகள்
தொடர்மழையில் கைத்தறி நெசவாளர்கள் கடும் அவதி
04-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மணி என்பவர் தலைமையில், கைத்தறி நெசவாளர்கள் திரண்டுவந்து மனு அளித்தனர்.கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:கோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர், பி.என்., ரோடு, நெசவாளர் காலனியில் கைத்தறி நெசவு தொழில் செய்துவரும் 218 குடும்பங்களுக்கு, பட்டா வழங்க, கடந்த 2019ல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில், 18 நெசவாளர் குடும்பங் களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மேலும் 200 குடும்பங்களுக்கு பட்டா வழங்கவேண்டியுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்தபோதும், பட்டா வழங்காமல் இழுத்தடித்துவருகின்றனர்.இதற்கு காரணமான இருவர் (பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்) கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளை மிரட்டிவருகின்றனர். இவ்விருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். மீதமுள்ள 200 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பட்டா வழங்காமல் மேலும் காலம் தாழ்த்தினால், நெசவாளர் குடும்பங்கள் இணைந்து, மொட்டை அடிக்கும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
04-Dec-2024