உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுக்கை இசையுடன் அண்ணன்மார் கதை

உடுக்கை இசையுடன் அண்ணன்மார் கதை

குன்னத்துார்; குன்னத்துார் அடுத்த வெள்ளிரவெளி கிராமத்தில் கடந்த ஜூன் 27 முதல் கடந்த ஆக., 30ம் தேதி வரை, 60 நாட்கள் அண்ணன்மார் சுவாமி வீர வரலாற்று கதை மற்றும் உடுக்கை இசைப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. தாமரை கலைக்குழு கலைஞர்கள் விஜய், கோபால கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் பொது மக்களுக்கு அண்ணன்மார் வரலாற்று கதையை உடுக்கை இசையுடன் பாட்டுபாடி விளக்கி கூறினர். நிறைவுநாள் நிகழ்ச்சியில், படுகளப் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை