மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகை வந்தது எப்படி?
10-Oct-2025
திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழில்முனைவோர், நாளையே புது கணக்கு துவக்குவதாக, அறிவித்துள்ளனர். திருப்பூர் நகரப்பகுதிக்கு, தொழில் நிமித்தமாக வந்த வடமாநில தொழில் முனைவோர், நீண்ட நாட்களாக திருப்பூரில் வாசிகளாக வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மாநில பண்டிகைகளை, திருப்பூரிலேயே கொண்டாடுகின்றனர். தீபாவளியும், ஐப்பசி அமாவாசையும் அடுத்தடுத்த நாளில் வந்தால், திருப்பூரில் அந்தாண்டு இரட்டை தீபாவளி கொண்டாடப்படும். வடமாநில மக்கள், பெரும்பாலும் அமாவாசை நாளில் தான் தீபாவளி கொண்டாடுகின்றனர். அவர்களது பாரம்பரிய வழக்கப்படி, தொழிற்சாலை, கடைகள், வீடுகளில், வாழைக்கன்று நட்டு, மாவிலை தோரணம் கட்டி, புதிய கணக்கு துவங்கும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர் அதற்கு பிறகுதான், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அமாவாசை திதி மாலை 4:14 மணிக்கு துவங்குகிறது. எனவே, நாளையே தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதாக, வடமாநில மக்கள் அறிவித்துள்ளனர். இந்தாண்டு, திருப்பூரில் இரட்டை தீபாவளி கொண்டாட்டம் இருக்காது.
10-Oct-2025